கை கொடுக்காத அன்லாக்.. தொடர்ந்து 2வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் சரிவு…ஆகஸ்டில் ரூ.86,449 கோடியாக குறைந்தது

 

கை கொடுக்காத அன்லாக்.. தொடர்ந்து 2வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் சரிவு…ஆகஸ்டில் ரூ.86,449 கோடியாக குறைந்தது

தொடர்ந்து 2வது மாதமாக கடந்த ஆகஸ்டில் ஜி.எஸ்.டி. வசூல் குறைந்துள்ளது. அந்த மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.86,449 கோடியாக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதனால் ஜி.எஸ்.டி. வருவாய் நினைத்து பார்க்காத அளவுக்கு அதாள பாதாளத்தில் வீழ்ந்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.32,294 கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்தது.

கை கொடுக்காத அன்லாக்.. தொடர்ந்து 2வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் சரிவு…ஆகஸ்டில் ரூ.86,449 கோடியாக குறைந்தது
ஜி.எஸ்.டி. வசூல்

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் நாட்டின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. இதனால் கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.62,009 கோடியாக உயர்ந்தது. கடந்த ஜூன் மாதத்தில் அன்லாக் 1.0 அமலுக்கு வந்ததால் அந்த மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.90,917 கோடி வசூலானது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மாதத்தில் இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி. வசூலானது மத்திய அரசுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. ஜூலையில் லாக்டவுன் விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டது. இதனால் ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் ரூ.1 லட்சம் கோடிக்கு குறைவில்லாமல் வந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த ஜூலையில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.87,422 கோடி மட்டுமே கிடைத்தது.

கை கொடுக்காத அன்லாக்.. தொடர்ந்து 2வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் சரிவு…ஆகஸ்டில் ரூ.86,449 கோடியாக குறைந்தது
அன்லாக் 3.0

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அன்லாக் 3 நடைமுறைக்கு வந்தது. பெரும்பாலான லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அந்த மாதத்தில் ஜி.எஸ்.டி. நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முந்தைய ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்டில் ஜி.எஸ்.டி. வசூல் குறைந்துள்ளது. அந்த மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.86,449 கோடியாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூலாக ரூ.98,202 கோடி வந்தது. மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க மத்திய அரசு தடுமாறி வரும் சூழ்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் குறைந்து இருப்பது மத்திய அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.