சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்: மதுரை அருகே பரபரப்பு!

 

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்: மதுரை அருகே பரபரப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. ஆண்டு தொடங்கியதில் இருந்தே எங்கே பார்த்தாலும் விபத்து, கொலை, கொள்ளை என பல சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு பரவியதால், மக்களின் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக சாலை விபத்துகளும், சாலையில் ஏற்படும் சேதங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதளவில் பாதிக்கிறது. இதே போன்ற சம்பவம், மதுரையிலும் நடந்திருக்கிறது.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்: மதுரை அருகே பரபரப்பு!

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியில் இருக்கும் தீயணைப்பு நிலையம் அருகே இன்று காலை, சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக, அச்சமயத்தில் மக்கள் யாரும் அங்கே செல்லவில்லை என கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த அப்பகுதியின் மேலதிகாரிகள், அந்த பள்ளத்தின் வழியே யாரும் செல்லாத வண்ணம் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும், இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.