குளிர்பான பாட்டிலில் அடைத்து கள்ளச் சாராயம் விற்பனை – மளிகைக்கடை உரிமையாளர் கைது!

 

குளிர்பான பாட்டிலில் அடைத்து கள்ளச் சாராயம் விற்பனை – மளிகைக்கடை உரிமையாளர் கைது!

திண்டுக்கல்

ஆத்தூர் அருகே மளிகைக் கடையில் குளிர்பான பாட்டிலில், கள்ளச் சாராயத்தை அடைத்து விற்பனை செய்த நபரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம்‌ ஆத்தூர் அடுத்துள்ள தருமத்துப்பட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக பழனி மதுவிலக்குப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான போலீசார், நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குளிர்பான பாட்டிலில் அடைத்து கள்ளச் சாராயம் விற்பனை – மளிகைக்கடை உரிமையாளர் கைது!

அப்போது, தருமத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் அன்னராஜா, தனது மளிகை கடையில் 200 மில்லி லிட்டர் குளிர்பான பாட்டிலில், கள்ளச் சாராயத்தை அடைத்து வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அன்னராஜாவை கைதுசெய்த மதுவிலக்குப் பிரிவு போலீசார், அவர் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 50 பாட்டில் சாராயம் மற்றும் சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என அன்னராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.