`என் மகள் சாகப் போகும் அளவுக்கு தைரியம் கிடையாது; அவ ஒரு கோழை!’- எரித்துக் கொல்லப்பட்ட திருச்சி மாணவியின் தாய் கதறல்

 

`என் மகள் சாகப் போகும் அளவுக்கு தைரியம் கிடையாது; அவ ஒரு கோழை!’- எரித்துக் கொல்லப்பட்ட திருச்சி மாணவியின் தாய் கதறல்

“என் மகள் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு சாகபோகும் அளவிற்கு தைரியமான பொண்ணு இல்லீங்க. அவ ஒரு கோழை. யாரோ என் மகளை எரித்துக் கொன்னுட்டாங்க” என்று கண்ணீருடன் கூறினார் மாணவி கங்காதேவியின் தாயார்.

`என் மகள் சாகப் போகும் அளவுக்கு தைரியம் கிடையாது; அவ ஒரு கோழை!’- எரித்துக் கொல்லப்பட்ட திருச்சி மாணவியின் தாய் கதறல்

திருச்சி மாவட்டம், அல்லித்துறையடுத்த அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி-மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள், கங்கா தேவி (14 வயது) 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 6ம் தேதி மதியம் 2 மணிக்கு வீட்டைக் கூட்டிவிட்டு அதிலிருந்த குப்பையைக் கொட்டுவதற்காக வெளியில் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகக் காணாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது ஊருக்கு வெளிப்புற பகுதியில் முள்காட்டில் பாதி எரிந்த நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அங்குச் சென்று பார்த்த போது மாணவி முட்புதரில் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

என்ன நடந்தது என்பது குறித்து சிறுமியின் தாய் மகேஸ்வரி கூறுகையில், ”எனக்கு ரெண்டு பொண்ணு. ஒரு பையன். ரெண்டாவது பொண்ணு தான் கங்கா தேவி. எங்க உறவுக்கார பையனோட பேசிக்கிட்டு இருக்காருன்னு கேள்விப்பட்டதும் அவங்க அப்பா எனது மகளை கண்டிச்சாரு. ஆனா என் மகள் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு சாகபோகும் அளவிற்கு தைரியமான பொண்ணு இல்லீங்க. அவ ஒரு கோழை. இந்த நிலைமையில கடந்த 6ம் தேதியன்று வீட்டை கூட்டிவிட்டு குப்பையை கொட்ட சென்றவள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. எல்லோரும் தேடிக்கிட்டு இருந்தபோது முள் காட்டில் என் மகள் எரிந்த நிலையில் கிடப்பதாக தகவல் சொன்னார்கள்.

`என் மகள் சாகப் போகும் அளவுக்கு தைரியம் கிடையாது; அவ ஒரு கோழை!’- எரித்துக் கொல்லப்பட்ட திருச்சி மாணவியின் தாய் கதறல்

பதறி அடித்துக்கொண்டு நாங்களும் அங்கு சென்று பார்த்த போது முகம் முதல் வயிற்று பகுதி வரையிலும் எரிந்து இருக்கிறது. அதற்கு கீழ் எரியவில்லை. அந்த இடத்தில் மண்எண்ணெய் கேனும், தீப்பட்டி கிடந்துள்ளது. ஆனால், உடல் கிடந்த இடத்தில் எரிந்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லை. அவள் கிடந்த இடத்தில் புள் செடிகளும் அப்படியே இருக்கிறது. உடம்பில் தீ வைத்துக்கொண்டால் ரண வேதனையில் அங்கும் இங்கும் ஓடுவார்கள். ஆனால் அதுமாதிரி செய்யாமல் ஒரே இடத்தில் கிடந்திருக்கிறாள். அது தான் எங்களுக்கு சந்தேகம் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எங்களுடைய சந்தேகம் என்னவென்றால் யாரோ கொலை செய்துவிட்டு இங்கே கொண்டு வந்து போட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது” என்று கதறினார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக பிடிப்பட்ட 2 பேரை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கங்காதேவியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.