Chill கிரேட்டா vs Chill ட்ரம்ப் – ட்விட்டரில் பதிலடி தந்த கிரேட்டா தன்பர்க்

Chill கிரேட்டா vs Chill ட்ரம்ப் – ட்விட்டரில் பதிலடி தந்த கிரேட்டா தன்பர்க்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் இழுபறி நீடித்துக்கொண்டே இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவின் அதிபருக்கான மெஜாரிட்டிக்கு 270 வாக்குகள் தேவை. இப்போதைய நிலையில் ஜோ பைடன் 264 ; ட்ரம்ப் 214 என்ற நிலையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Chill கிரேட்டா vs Chill ட்ரம்ப் – ட்விட்டரில் பதிலடி தந்த கிரேட்டா தன்பர்க்

இந்நிலையில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், ட்ரம்க்கு ஒரு ட்வீட் செய்திருக்கிறார். ட்ரம்ப், அமெரிக்கா வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்விதமாக STOP THE COUNT என ட்விட் செய்திருந்தார்.

Chill கிரேட்டா vs Chill ட்ரம்ப் – ட்விட்டரில் பதிலடி தந்த கிரேட்டா தன்பர்க்

அதை ரீட்விட் செய்த கிரேட்டா ’இது அபத்தமான ஒன்று. ட்ரம்ப் தன் கோபத்தை சரியாக கையாள வேண்டும். அதற்கான வழியாக நண்பர்களோடு படம் பாருங்கள். Chill ட்ரம்ப்’ என்று பதிவிட்டிருந்தார்.

ஜோ பைடன் பாரீஸ் ஒப்பந்ததிற்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தார். அதனால், சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பர்க்கும் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்தார். அதனால், இந்த ட்விட் செய்திருக்கார் என்றால், அதுதான் இல்லை.

Chill கிரேட்டா vs Chill ட்ரம்ப் – ட்விட்டரில் பதிலடி தந்த கிரேட்டா தன்பர்க்

கிரேட்டா ட்விட் செய்த வரிகள் ஏற்கெனவே ட்ரம்ப் டிவிட்டில் எழுதியது. அதுவும் கிரேட்டா தன்பர்க்குக்கு எழுதியவை. டைம் பத்திரிகை 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமையாக கிரேட்டா தன்பர்க்கை தேர்வு செய்திருந்தது. அதைப் படித்த ட்ரம்ப், தனது ஆத்திரத்தை அப்படி வெளிப்படுத்தினார். அந்த வரிகளையே இப்போது ட்ரம்ப்க்கு திருப்பி அனுப்பியிருக்கிறார் கிரேட்டா தன்பர்க்.