Home உலகம் ’மகிழ்ச்சியான முதியவர்’ ட்ரம்பைக் கலாய்த்து கிரேட்டா துன்பர்க் ட்விட்!

’மகிழ்ச்சியான முதியவர்’ ட்ரம்பைக் கலாய்த்து கிரேட்டா துன்பர்க் ட்விட்!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி ஏற்றுவிட்டார். பெரும் வன்முறை ஏற்படும், ட்ரம்ப் ஏதேனும் கடைசி நேரத்தில் சதிச் செயல் செய்யக்கூடும் என்றெல்லாம் அச்சப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அப்படியேதும் நடைபெறாமல் அமைதியாகவும் எளிமையாகவும் பதவி ஏற்பு விழா நடைபெற்று முடிந்திருக்கிறது.

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா அவையில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்தவர் கிரேட்டா துன்பர்க். இந்த இளம் வயதில் சுற்றுச்சூழல் குறித்து பெருமளவு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தவர். அவரின் பெயர் நோபல் பரிசுக்கான பரிந்துரையில்கூட இருந்தது.

Greta Thunberg

கிரேட்டா தற்போது தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் அதிபர் ட்ரம்பைக் கலாய்த்திருக்கிறார். அதில், எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மகிழ்ச்சியான முதியவரைப் பார்க்க நன்றாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கிரேட்டா – ட்ரம்ப் இருவருக்கும் ஏற்கெனவே ட்விட்டர் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. ட்ரம்ப், அமெரிக்கா வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்விதமாக STOP THE COUNT என ட்விட் செய்திருந்தபோது, கிரேட்டா பதிவிட்ட ட்விட் என்ன தெரியுமா?

’இது அபத்தமான ஒன்று. ட்ரம்ப் தன் கோபத்தை சரியாக கையாள வேண்டும். அதற்கான வழியாக நண்பர்களோடு படம் பாருங்கள். Chill ட்ரம்ப்’ என்று பதிவிட்டிருந்தார்.

கிரேட்டா ட்விட் செய்த வரிகள் ஏற்கெனவே ட்ரம்ப் டிவிட்டில் எழுதியது. அதுவும் கிரேட்டா துன்பர்க்குக்கு எழுதியவை. டைம் பத்திரிகை 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமையாக கிரேட்டா துன்பர்க்கை தேர்வு செய்திருந்தது. அதைப் படித்த ட்ரம்ப், தனது ஆத்திரத்தை அப்படி வெளிப்படுத்தினார். அந்த வரிகளையே அப்போது ட்ரம்ப்க்கு திருப்பி அனுப்பியிருந்தார் கிரேட்டா.

மாவட்ட செய்திகள்

Most Popular

காதலிக்கு கல்யாண ஆசை -காதலனுக்கு கலைக்க ஆசை -கடைசியில் நடந்த சோகம் .

கல்யாணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பிணி  காதலியை கொன்று புதைத்த காதலனை போலீசார் கைது செய்தார்கள்

திமுக மீது திடீர் வழக்கு : நெருக்கடி கொடுக்கும் அதிமுக அரசு?!

திருச்சி சிறுகனூரில் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக பிரம்மாண்ட மாநாடு நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்...

குடிநீர் தொட்டிக்குள் குதித்து அக்கா, தம்பி தற்கொலை… உருக்கமான கடிதம் சிக்கியது…

கோவை கோவை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரியுடன், மென் பொறியாளர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம்...

“சட்டசபைக்குள்..பாஜக எம்.எல்.ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து”

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, பெரும்பாலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்கிவிட்டது. இன்னும் ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கிறது....
TopTamilNews