Home உலகம் நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் கிரேட்டா துன்பர்க்!

நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் கிரேட்டா துன்பர்க்!

அறிவியல் ஆய்வாளாராக விளங்கிய ஆல்பிரட் நோபல் நினைவாக நோபல் பரிசுகள் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நோபலில் நினைவு நாளான டிசம்பர் 10 -ம் தேதி விருதுகள் வழங்கப்படும்.

முதலில் நோபல் விருது குழு பெயர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியலைத் தயார் செய்யும். அடுத்து அதிலிருந்து நாமினிகளை முடிவு செய்யும். அதன் பிறகு, சுருக்கமாக ஒரு பட்டியலைத் தயார் செய்யும். பிறகு ஆலோசனைக் குழு அந்தப் பட்டியலை ஆய்வு செய்யும். அடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்றவர் பெயர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். இறுதியாக டிசம்பர் மாதம் 10-ம் தேதி விருது வழங்கப்படும்.

இப்போது அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் கிரேட்டா துன்பர்க் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இம்மாதம் 9-ம் தேதி விருது அறிவிக்கும்போது கிரேட்டா விருது தேர்வாகியுள்ளாரா என்பது தெரிய வரும்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவிதான் கிரேட்ட துன்பர்க். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் இந்த உலகம் அடையும் துன்பம் பற்றிய ஐநா அவையில் துணிச்சலோடு ’உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? என்று கேள்வியைக் கேட்டவர் கிரேட்டா தன்பர்க்.

உலக தலைவர்கள் கிரேட்டா தன்பர்க்கின் பேச்சைக் கேட்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். ஒரு பள்ளி மாணவி துணிவு, தெளிவும், நேர்மையும் கண்டு உலகே வியப்படைந்தது.

அவரது உரையில் கடந்த 30 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தைப் பற்றிய விஞ்ஞானிகள் சொல்வதை உலக நாடுகள் கேட்க மறுப்பது குறித்து காத்திரமான தன் கருத்துகளைப் பகிர்ந்தார்.

அதன்பின் உலகமே கொண்டாடும் சுற்றுச்சூழல் போராளியாக கிரேட்டா துன்பர்க் மாறிபோனார். கிரேட்டாவுக்கு நோபல் பரிசு கிடைக்கும்பட்சத்தில் அவர் இந்த உலகில் பரப்ப நினைக்கும் செய்திகளைக் கொண்டு செல்ல பேருதவியாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாற்றுத்திறனாளி கணவரை எரித்துக்கொன்ற பெண் கைது!

ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் மாற்றுத்திறனாளி கணவரை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அடுத்த...

விருப்பமனு அளித்தவர்களிடம் கமல், பழ.கருப்பையா நேர்காணல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றுகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதனிடையே,...

“மனநலம் பாதித்த ஒருவரின் செயல்…” : வீரமணி கண்டனம்!

தஞ்சை ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அறிவிக்கப்பட்டதற்கு வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை...

14 மிமீ உயரத்தில் தங்க ‘டார்ச் லைட்’ சின்னம்… படைத்த தொண்டரை வாழ்த்திய கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த தொண்டர் மணிகண்டன். கைவினைக் கலைகளில் சிறப்புவாய்ந்தவரான இவர் 14 மிமீ உயரத்தில் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை தங்கத்தில் வடிவமைத்திருக்கிறார். உலகிலேயே மிக...
TopTamilNews