பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

நவ.30ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் புத்தாடை வாங்குவதிலும், பட்டாசுகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்த ஆண்டு ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு இன்று காலை அறிவித்தது. கொரோனா நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டும், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அசோக் கெலாட் விளக்கம் அளித்திருந்தார்.

பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

இந்த நிலையில், வரும் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு எரிக்கப்படும் நிலங்களால் தற்போது காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் கடுமையான காற்று மாசு நிலவும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு பசுமை தீர்ப்பாயம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.