தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத பிரம்மாண்ட திட்டம்! ராமநாதபுரம் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்!

 

தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத பிரம்மாண்ட திட்டம்! ராமநாதபுரம் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்!

ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண்மை முதன்மையான தொழிலாக இருந்தாலும்,கோடைக்காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமான அளவு நீர் இருப்பதில்லை. தமிழகத்தின் வானம் பார்த்த வறண்ட மாவட்டங்களாகவே இவை விளங்குவதால் இம்மாவட்டங்களில் வாழும் மக்கள் நீர் ஆதாராங்களை பெரிதும் எதிர்பார்த்து வாழும் சூழல் நிலவி வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளின் பங்களிப்போடு நீர்நிலைகளில் குடிமராமத்து திட்டம் 49 கோடியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் 31 கோடி செலவில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத பிரம்மாண்ட திட்டம்! ராமநாதபுரம் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்!

இதையெல்லாம் தாண்டி 14,000 கோடி செலவில் காவேரி-வைகை-குண்டாறு வரையிலான நதிநீர் இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

காவேரி முதல் குண்டாறு வரை 259 கிலோ மீட்டர் வரையிலும், காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலே மீட்டர் வரையிலும்,தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 108 கிலோ மீட்டர் வரையிலும், வைகை முதல் குண்டாறு 33 கிலோ மீட்டர் வரையிலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத பிரம்மாண்ட திட்டம்! ராமநாதபுரம் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்!

இதுவரை இவ்வளவு அதிக பொருட்செலவில் தமிழகத்தில் எந்த திட்டமும் நடைபெறவில்லை. இதன் மூலம் 1 லட்சம் ஏக்கரில் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
வறட்சியான இராமநாதபுரம் வளர்ச்சியடைய 14000 கோடியிலான நதிநீர் இணைப்பு பல்வேறு வளர்ச்சிகளுக்கு முக்கிய மைல்கல்லாக அமையும்.

அதுமட்டுமில்லாமல், 76.61 கோடியில் புதிய சட்டக்கல்லூரி கட்டிட பணிகள் நடந்து வருகிறது. புதிய மருத்துவ கல்லூரி -345 கோடி, 4.20 கோடியில் விபத்து சிறப்பு பிரிவு வரவிருக்கிறது.

விவசாயம்,கல்வி, மருத்துவம் ஆகியன சிறந்த தரத்தில் கிடைத்தால் எந்தவொரு மாவட்டமும் சிறந்த வளர்ச்சி பெறுவது உறுதி. ராமநாதபுரம் மாவட்டம் சிறந்த வளர்ச்சி பெறப்போவதும் உறுதி.