”கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்” 17ம் தேதி தொடக்கம் – அமேசான் அறிவிப்பு

 

”கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்” 17ம் தேதி தொடக்கம் – அமேசான் அறிவிப்பு

அமேசான் நிறுவனத்தின் ”கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்” என்ற சிறப்பு விற்பனை வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

”கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்” 17ம் தேதி தொடக்கம் – அமேசான் அறிவிப்பு

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் வரும் 17ம் தேதி முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் சிறப்பு விற்பனை தொடங்கி நடைபெறும் என்றும், இதில் ஆயிரக்கணக்கான தள்ளுபடி ஆபர்கள் கிடைக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரம் முன்னதாக அந்த குறிப்பிட்ட தள்ளுபடியில் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி கார்டை கொண்டு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ள அமேசான், முதன்முறையாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாகவும அறிவித்துள்ளது.

”கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்” 17ம் தேதி தொடக்கம் – அமேசான் அறிவிப்பு

இதைத்தவிர, முன்பணம் இன்றி மாதாந்திர தவணையில் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள அமேசான் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனை திருவிழாவின் போது, ஏராளமான பொருட்களை சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை 17ம் தேதி தொடங்கினாலும், எத்தனை நாட்கள் வரை நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. எனினும் 5 நாட்களுக்கு இந்த விற்பனை நடைபெறும் என கூறப்படுகிறது. அமேசானின் முக்கிய போட்டி நிறுவனமான பிளிப்கார்ட், அதன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை வரும் 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், 17ம் தேதி அமேசானின் சிறப்பு தள்ளுபடி விற்பனையும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

”கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்” 17ம் தேதி தொடக்கம் – அமேசான் அறிவிப்பு
  • எஸ். முத்துக்குமார்