’நீட் தேர்வை இந்த நேரத்தில் நடத்துவது நியாயமல்ல’ குரல் கொடுக்கும் கிரேட்டா தன்பர்க்

’நீட் தேர்வை இந்த நேரத்தில் நடத்துவது நியாயமல்ல’ குரல் கொடுக்கும் கிரேட்டா தன்பர்க்

’உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?’ என்ற வாக்கியத்தைப் படித்ததுமே நம் நினைவில் வரும் பெயர் கிரேட்டா தன்பர்க்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவிதான் கிரேட்ட தன்பர்க். மாறிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் இந்த உலகம் அடையும் துன்பம் பற்றிய ஐநா அவையில் துணிச்சலோடு இந்தக் கேள்வியைக் கேட்டவர் கிரேட்டா தன்பர்க்.

உலக தலைவர்கள் கிரேட்டா தன்பர்க்கின் பேச்சைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார்கள். ஒரு பள்ளி மாணவி துணிவு, தெளிவும், நேர்மையும் கண்டு உலகே வியப்படைந்தது.

’நீட் தேர்வை இந்த நேரத்தில் நடத்துவது நியாயமல்ல’ குரல் கொடுக்கும் கிரேட்டா தன்பர்க்

அவரது உரையில் கடந்த 30 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தைப் பற்றிய விஞ்ஞானிகள் சொல்வதை உலக நாடுகள்  கேட்க மறுப்பது குறித்து காத்திரமான தன் கருத்துகளைப் பகிர்ந்தார்.

அதன்பின் உலகமே கொண்டாடும் சுற்றுச்சூழல் போராளியாக கிரேட்டா தன்பர்க் மாறிபோனார்.

’நீட் தேர்வை இந்த நேரத்தில் நடத்துவது நியாயமல்ல’ குரல் கொடுக்கும் கிரேட்டா தன்பர்க்

அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் நடக்கவிருக்கும் நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

கொரோனா கால பேரிடர் வேளையிலும் இந்திய அரசு நீட், ஜெஇஇ தேர்வுகளை நடத்த மும்முரமாய் உள்ளது. அது குறித்து கிரேட்டா தன்பர்க்,

”கொரோனா நோய்ப் பரவும் அபாயம் மற்றும் லட்சகணக்கான மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தியா அரசு தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது நியாமற்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் அந்த மாணவர்களின் பக்கம் நிற்பதாகவும் தெரிவித்து, #PostponeJEE_NEETinCOVID எனும் ஹேஷ்டேக்கையும் இட்டிருக்கிறார்.