மானிய கோரிக்கை திட்டங்கள் – முதல்வர் நாளை ஆலோசனை

 

மானிய கோரிக்கை திட்டங்கள் – முதல்வர் நாளை ஆலோசனை

மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

மானிய கோரிக்கை திட்டங்கள் – முதல்வர் நாளை ஆலோசனை

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் முழு நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முழு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் 14-ஆம் தேதி தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இதையடுத்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது . இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மானிய கோரிக்கை திட்டங்கள் – முதல்வர் நாளை ஆலோசனை

தொழில்துறை, போக்குவரத்து, அறநிலையத் துறை, சுகாதாரத்துறை, பள்ளிகல்வி, உயர்கல்வித் துறை உள்ளிட்ட பல துறைகளில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் . அதில் நகை கடன் தள்ளுபடி, போராட்டம் வழக்குகள் வாபஸ், பாரதியார் நினைவு நூற்றாண்டு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.