• February
    28
    Friday

Main Area

Main



பூனையை மீட்பதற்காக 7 வயது சிறுவனை கயிறு கட்டி இறக்கிய பாட்டி ; அதிர்ச்சி வீடியோ!

 வீடியோ
வீடியோ

சீனாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த பூனையை காப்பற்றுவதற்காக தனது பேரனின் இடுப்பில் கயிறை கட்டி 5 வது தளத்திலிருந்து கீழே இறக்கிய அந்த அதிர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.

china

பூனை, குடியிருப்பின் ஜன்னல் சன் ஷேடின் மீது மாட்டிக்கொண்டது. அந்தப்  பூனைக்கு அங்கிருந்து எப்படி இறங்கவது என்று  தெரியாமல் பயத்தில் தவித்துக்கொண்டிருப்பதை ஐந்தாவது மாடியில் இருக்கும் பாட்டி ஒருவர் கவனிக்கிறார். அதைக்  காப்பாற்ற தனது ஏழு வயது பேரனின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, மெல்ல பூனை இருக்கும் இடத்திற்கு மாடியிலிருந்து இறங்குகிறார்..அந்தப்  பூனை இவர்களிருக்கும் 5 வது தளத்திலிருந்து 2 மாடிகள் கீழே இருந்தது.அந்த வீடியோவில் சிறுவனை இறக்கும்போதும் கூடி இருந்த மக்கள் ஜாக்கிரதை என குரல் எழுப்பிய சத்தம் கேட்கிறது. 

grandma

மேலும் அந்த பாட்டி பத்திரமாக சிறுவனை மீண்டும் மேலே எடுத்தார்.பூனையும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டது.இந்த மீட்புப்பணி மொத்தம் 10 நிமிடங்கள் நடைபெற்றதாகவும்,இதில் அந்த சிறுவன் மற்றும் பூனை இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இந்த செயலுக்காக அந்த பெண்மணி கடுமையாக விரமசிக்கப்பட்டார். ‘பூனையின் உயிரை காப்பாற்ற சிறுவனின் உயிரை பணயம் வைத்த பெண்’ என்று விமர்சனங்கள் எழுந்தன. 

அந்த சிறுவன் தனக்கு எதுவும் ஆகவில்லை என்று கூறினான் ஆனால் அவனது பாட்டி அந்த விடியோவை பார்த்து மிகவும் பயந்தாக தெரிவித்தார். மேலும் அந்த பெண்மணி "நான் இனி எப்போதும் இதுபோன்ற செயல்களை செய்யமாட்டேன், ஆனால் அந்த தருணத்தில் பூனையின் நிலை மிகவும் வருத்தமளிக்கும் விதத்தில் இருந்தது,ஆயினும் இந்த செயலை எனது இதயத்தில் உறுதியை வரவழைத்து இந்த செயலை மேற்கொண்டேன்" இவ்வாறு கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.