ஆன்லைன் கிளாஸில் பாட்டி… பட்டம் விடும் பேரன்! வைரலாகும் ஓவியம்

கொரொனாவைப் பற்றிப் பேசாத நாளே இல்லை. செய்தி சேனல்கள் பார்க்காதவர்கள்கூட கொரோனா அப்டேட்டில் ஒரு கண் வைக்கிறார்கள். மார்ச் மாத இறுதியிலிருந்து நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

ஊரடங்கு தொடங்கி நான்கு மாதங்களாயிற்று பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என உத்தேசமாகக் கூட ஒரு தேதியை தீர்மானிக்க முடியவில்லை. அந்தளவுக்கு கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆன்லைன் வகுப்புகள் குறித்து கல்வியாளர்கள் பல்வேறு பாதகங்களை விளக்குகிறார்கள். அதேநேரம் நீண்ட காலம் கற்றலை விட்டு விலகி இருந்தால் இடைநிற்றல் அதிகமாகும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் போகட்டும். ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வீடுகளில் நடக்கும் அலப்பறைகளே தனி. நேற்று, ஒரு குழந்தைக்கு ஹோம்வொர்க் கொடுத்ததைச் செய்ய வில்லை என்று அம்மா மிரட்டுவது, அதற்கு அக்குழந்தை அழுதுகொண்டே நாளை செய்துவிடுகிறேன் எனச் சொல்லும் வீடியோ வைரலானது.

இன்று ஒரு வீட்டில் பேரனுக்கான ஆன்லைன் கிளாஸில் பாட்டி கவனித்துக் குறிப்பு எடுக்கிறார். சரி, பேரன் எங்கே என்று கேட்கிறீர்கள… அவன் பெஞ்சின் மறுபுறம் குனிந்துகொண்டு விளையாடுகிறான் அல்லது தூங்குகிறான். இந்தப் படத்தைப் பலரும் பகிர்ந்த்கொண்டிருந்தார்கள்.

இந்த போட்டோ ஓர் ஓவியரின் கண்களில் பட்டிருக்கிறது. அந்தப் பேரன் என்ன செய்திருப்பான் என யோசித்திருக்கார் அல்லது என்ன செய்ய வேண்டும் என அந்தப் பேரன் ஆசைப்பட்டிருப்பான் என ஓவியர் சிந்திருக்கிறார். அதன் விளைவு ரொம்ப கிரியேட்டிவிட்டியான ஓர் ஓவியத்தை வரைந்திருக்கிறார். இப்போது வரை அந்த ஓவியர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த ஓவியம் ஃபேஸ்புக், டிவிட்டர் இரண்டில் செம வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி டெப்ட்டி கமிஷனர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போட்டோவையும் ஓவியத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் குட்டி குழந்தைகளின் கல்வி உலகவும் கனவு உலகமும் வேறு வேறாக இருப்பதை குறித்து உண்மையை விளக்கும் இந்தப் புகைப்படத்தை எடுத்தவருக்கும் வரைந்தவருக்கும் பாராட்டுகள்’ என்று புகழ்ந்துள்ளார்.

 

https://twitter.com/ArjunSaravanan5/status/1286837497998258179

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...