• March
    28
    Saturday

Main Area

Main



'என்கிட்ட எங்கடா பணம் இருக்கு'..ரூ.33 ஆயிரம் பழைய நோட்டுகளை மறந்து போன 92 வயது மூதாட்டி !

kamalamaal
kamalamaal

கோவை கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி கமலம்மாள். இவரது கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் அனைவர்க்கும் திருமணமாகி, மகன்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். கமலம்மாளுக்குப் பணம் சேமிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் சிறுக சிறுக ரூ.33,000 வரை சேமித்து பீரோவில் வைத்துள்ளார். பணமதிப்பிழப்பின் போது, அவரது மகன்கள் பணம் ஏதேனும் உள்ளதா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி " என்கிட்ட எங்கடா பணம் இருக்கு" என்று கூறி தான் வைத்திருந்த பணத்தை மறந்து மறந்துள்ளார்.

ttn

இது குறித்துப் பேசிய அவரது மகன், பணமதிப்பிழப்பின் போது அம்மா.. பணம் இல்லை என்று கூறியதால் நாங்களும் அப்படியே விட்டு விட்டோம். சமீபத்தில் அவரது பீரோவை சுத்தம் செய்யும் போது அதில் பணம் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மீண்டும் அம்மாவிடம் கேட்ட போது, எனக்கு அது ஞாபகமே இல்ல சாமி என்றார். அதனை மாற்றுவதற்கு எவ்வவளோ முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை. இதற்கு அரசாங்கம் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். 

ttn

முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள் அவர்களது பேரன் பேத்திகளுக்காக ரூ.40,000 வரை சேர்த்து வைத்த பணம் செல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. 


 

2018 TopTamilNews. All rights reserved.