• April
    04
    Saturday

Main Area

Mainசுகமான சோகங்கள்-2 கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம்..!

gramophone-series-part-02
gramophone-series-part-02

தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்து இரண்டே இரண்டு பாடல்கள்தான் காதல் தோல்வி பாடல்களின் அடையாளமாக இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. முதல் பாடல் ‘உலகே மாயம் வாழ்வே மாயம்..’ என்ற பாடல். இரண்டாவது பாடல்  ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு..’ என்ற பாடல்  1984-ல் வெளிவந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் பாடல்கள் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை அந்தக் காலத்தில் இருந்த இளசுகள் அத்தனை பேருக்கும் தெரியும்.

valvae-Mayam

கேஸட்டுக்காக தவம் கிடந்த இளைஞர்கள் 

அப்போது பிரபலமாக இருந்த கேசட் கடைகளிலும், பதிவு செய்து கொடுக்கும் கடைகளிலும் இளஞர்களின் கூட்டம் அலைமோதும். நாம் பதிவு செய்ய கொடுத்த கேஸட் வரிசைப்படி பதிவு செய்யப்பட்டு கைக்கு வர, சில நேரங்களில் இரண்டு நாள் கூட ஆகலாம். அதுவரைக்கும் நிலை கொள்ளாமல் கேஸட் கடைக்கு அலைந்தவர்கள் அநேகம். ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு..’ பாடலை மட்டுமே இரண்டு பக்கங்களிலும் பதிவு செய்து கேட்டு ரசித்தது. அந்தளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாடல்.

old-cassette-player

ஜெயச்சந்திரன் குரலின் ஆளுமை 

ஜெயச்சந்திரன் குரல் ஒலிப்பதாக இருந்தால் போதும் ஆயுளுக்கும் சோகத்தை அனுபவிக்கலாம் என்று தோன்றும். பாடலின் முதல் வரியை பாடிய பிறகு வரும் வயலின் அணிவகுப்பு இசையாய் ஒலிக்கும் போது,  கேட்கும் யாரையும் அணிச்சையாக கண்களை மூட வைத்துவிடும். அப்படியொரு சுகம். நமக்குள் பரவும். வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பாடல் என்பதால் ஜெயசந்திரன் குரலுக்குப் பின் தொடர்ந்தே வரும்படி தமேலாவை இசைத்திருப்பார் இளையராஜா.

வாலியின் பாசிட்டிவ் ஆட்டிடியூட் 

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல். இது. பொதுவாக எல்லா கவிஞர்களுமே . தாங்கள் எழுதும் பாடல்களில் எங்குமே எதிர்மறையான சொற்கள் வந்து விடாமல் பார்த்துக்கொள்வார்கள். ஒரு முறை வானம்பாடி படத்தில் கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதும் போது ‘கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.. அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்..’ என்று எழுதி விட்டார். படலை பாட வந்த டிம்.எம்.சௌந்தராஜன் கவிஞரிடம் ஐயா இப்படி இறைவனையே சாக வேண்டும் என்பது சரியா.?!  வேண்டுமானால் வாட வேண்டும் என்று போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லவும் கவிஞரும் அதை ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொடுத்திருக்கிறார்.

r-sundarrajan


 
இதில் கவிஞர் வாலி மிகவும் கவனமாக இருப்பார்.  நெகடிவ் சொல் வராமல் எப்படி எழுத வேண்டும் என்பதை அழகாக காட்டியிருப்பார்.
 
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப்போச்சு வௌக்கேத்தியாச்சு
பொன்மானே உன்ன தேடுது
 
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித்தவழும் தங்கச்சிமிழே
பொங்கிப்பெருகும் சங்கத்தமிழே

முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்  
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

rasathi-unna-kaanatha-nenju

 

ஒரு காதல் பிரிவு பாடலில் இத்தனை அழகியலை காட்ட வேண்டுமென்றால் அது காவியக்கவிஞர் வாலி அவர்களால்தான் முடியும். இயக்குநர் ஆர்.சுந்தராஜான் ஒரு வரியை எழுதி வாலியிடம் காட்ட, அதில் ‘பொழுதாகிப்போச்சு இருள் சூழலாச்சு’ என்று இருந்திருக்கிறது. வாலி இருள்சூழலாச்சே என்பது அறமாக இருக்கிறது. அதனால் ‘பொழுதாகிப்போச்சு விளக்கேத்தியாச்சு..’ என்று  வைத்துக்கொள்லலாம் என்று  அழகூட்டியிருக்கிறார்.

p-jayachandran
P Jayachandran

பல்லவியில் வரும்’ காணாத நெஞ்சு’ என்ற சொல்  ‘உன்னத்தேடுது’ என்ற சொல் இரண்டையும் உச்சரிக்கும்போது ஜெயசந்திரன் கொடுத்திருக்கும் நுணுக்கம் கதாபாத்திரம் ஏங்கித்தவிக்கும் அந்த மனநிலையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும். இதே பாடலை மறுமுறை பாடினால் அவருக்கே இப்படி வருமா என்று தெரியாது.
 
இரண்டாவது சரணத்தில்,
 
மங்கை ஒரு கங்கையென
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்காத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்..

ilayaraja-01

பாடகரே நெகிழ்ந்த தருணம் 

இந்தப்பாடலை பதிவு செய்வதற்காக ஜெயசந்திரனை அழைத்திருந்தார் இளையராஜா முதல் பாடலாக ‘ராசாத்தி ஒன்ன..’ பாடல் பதிவு செய்யப்பட்டது. அடுத்ததாக ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..’ அடுத்தாக  ‘காத்திருந்து காத்திருந்து..காலங்கள் போகுதடி’ பாடல் பதிவானது. ஜெயச்சந்திரனுக்கு ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ பாடல் மிகவும் பிடித்துப்போய் விட்டது. பாடி முடித்த பிறகு அவருக்கு கண்கள் குளமாகிவிட்டது.  

பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாராவின் இசை கச்சேரிக்காக லண்டன் சென்றிருந்தபோது பத்தாயிரம் பேர் கூடியிருந்த அரங்கில் ஜெயச்சந்திரனை அறிமுகப்படுத்தியபோது ‘ராசாத்தி ஒன்ன பாடல்’ ஜெயச்ந்திரன்  என்று  குறிப்பிட்டிருகிறார் ராஜா. மொத்தக்கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செய்திருக்கிறது.

vaitheki

இளையராஜா இசையின் அற்புதம்  

வைதேகி காத்திருந்தாள் படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்புடன் வசூலை அள்ளியது. தேனிக்கு பக்கத்தில் ஒரு மலை கிராமத்தில் டெண்ட் கொட்டாவில்  படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது  ‘ராசாத்தி  ஒன்ன காணாத நெஞ்சு’ பாடல் ஒலிக்கும் நேரத்தில் தியேட்டருக்குப் பக்கத்தில் தினமும் யானைக்கூட்டம் வந்து நின்றிருந்திருக்கிறது. சரியாக அந்த பாடல் முடிந்த பிறகு அந்த யானைகூட்டம் மீண்டும் காட்டுக்குள் சென்றிருக்கிறது. இது ஓவ்வொரு நாளும் நடந்திருக்கிறது. 

tentkotta


இளையராஜாவின் இசைக் காதல்  

இந்த சம்பவத்தை பல ஆண்டுகளுக்குப்பிறகு இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் சொன்னபோது அரங்கம் அதிர கரவொலி எழுந்திருக்கிறது. அதே போல் இந்தப் படமும்,பாடலும்  உருவான விதம் பற்றி இயக்குநர் ஆர்.சுந்தராஜன் கூறும் போது, “நான் பாடும் பாடல் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. இளையராஜாவிடம் ஏழு டியுன்கள் இருப்பதாகவும் ஏழு டியுனும் சூப்பராக இருப்பதாகாவும் அந்த ஏழு டியூனையும் ஒரே படத்திற்குதான் கொடுப்பேன் என்று இளையராஜா உறுதியாக இருக்கிறார் என்று நண்பர்கள் சொன்னார்கள். 
 
எனக்கு கோபம் வந்து விட்டது. அதெப்படி அவர் தரமாட்டேன் என்று சொல்லலாம் என்று டைரக்டர் என்ற திமிரில் நான் சொன்னேன். ஆனால் நான் இளையராஜாவிடம் போய் கேட்டபோதும் அதையேதான் சொன்னார்.  ஒரே படத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தால்தான் இந்த ஏழு டியுன்களையும் தருவேன்” என்றார். அந்த ஏழு டியூன்களையும் கேட்டபோது பிரமாதமாக இருந்தது. அதன்பிறகுதான் நான் அதை சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு வாரத்தில் வைதேகி காத்திருந்தாள் கதையை எழுதி முடித்தேன். அந்த ஏழு டியுன்களையும் பயன்படுத்திக்கொண்டேன். இளையராஜாவின் தொழில் திமிர் என்னை மெய்சிலிர்க்க வைத்தது” என்றார்.

வாலியின் பெருந்தன்மை 

இதற்கு மயங்க வைக்கும் இசை ஒரு காரணமாக இருந்தாலும்  அந்த இசையை வார்த்தைகளாக வடித்த கவிஞர் வாலி அவர்களின் தமிழுக்கும் பங்கு உண்டு. இந்த டியூனுக்கு வாலி அவர்கள்  முதலில் எழுதிய பல்லவி வேறு.
 
ராக்காலவேல பூப்போட்ட சேலை
புதுராகம் தான் பாடுது
 
என்று எழுதியிருந்தார். இயக்குநர் சுந்தராஜன் அவர்களுக்கு அது திருப்தியாக இல்லாததால் அவரே பல்லவியை எழுதி வைத்திருந்தார். அதை வாலி அவர்களிடம் காட்டி “அண்ணே என்னுடைய உதவி இயக்குநர் இந்த டியூனுக்கு ஒரு வரி எழுதியிருக்கிறார். அதை நீங்கள் பாருங்கள் ” என்று காட்டியிருக்கிறார். வாலி அதை பார்த்து விட்டு “அட நல்லாயிருக்குய்யா இதையே வெச்சுக்கலாமே” என்று பெரிய மனதுடன் அனுமதித்திருக்கிறார். யார் எழுதியது என்று சுந்தராஜனிடம் கேட்க,  தன் உதவி இயக்குநராக இருந்த பாலு ஆனந்த் என்பவரை வாலியிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 

balu-anand-bw


இன்றுவரை நாம் கேட்டு ரசிக்கும் ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு’  என்ற பாடலின் பல்லவியை எழுதியது மறைந்த பாலு ஆனந்த் அவர்கள்தான்.

மறக்க முடியாத பாடலின் மறுபக்கம் அடுத்த தொகுப்பு வரும் (07-01-2020) ரசிகர்களுக்காக

2018 TopTamilNews. All rights reserved.