பட்டப்பகலில் வீடு புகுந்து திருடும் பட்டதாரி- கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடும் பட்டதாரி- கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடும் பட்டதாரி கொள்ளையனை திருவள்ளூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து 53 சவரன் தங்க நகை, 1 லேப்டாப், 2 இரு சக்கர வாகனம் ஆகியவ்ற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடும் பட்டதாரி- கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதிகளில் கடந்த 2 மாதத்தில் 6 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இதனையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடும் பட்டதாரி- கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!

இந்த நிலையில் செவ்வாப்பேட்டை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி சோதனை செய்துள்ளனர்.

அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தியதில், அவர் பட்டப் பகலில் வீடு புகுந்து திருடும் பலே கொள்ளையன் என்பது தெரியவந்தது.

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடும் பட்டதாரி- கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!

இதனையடுத்து அவனைக் கைது செய்த போலிசார், விசாரணை செய்தபோது, அவன் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி என்பதும் பாண்டியன் என்ற மாய கிருஷ்ணன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளயடிப்பதில் கில்லாடியாக இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். அவனிடமிருந்து 53 சவரன் நகை, லேப்டாப் மற்றும் 2 இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊக்கத் தொகை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடும் பட்டதாரி- கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!