பாஜகவில் இருந்து விலகும் கவுதமி!? மக்கள் நீதி மய்யம் செல்வாரா?

 

பாஜகவில் இருந்து விலகும் கவுதமி!? மக்கள் நீதி மய்யம் செல்வாரா?

கடந்த சில மாதங்களாக நடிகை காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவே தன்னுடைய ரோல் மாடல் என சொல்லிவந்த நடிகை கெளதமி அவருடைய மரணத்துக்கு பின் பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. குறிப்பாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதிலிருந்து கெளதமிக்கு கட்சியில் உரிய மரியாதை இல்லை எனக் கூறப்படுகிறது. கெளதமிக்கு பிறகு கட்சியில் இணைந்த காயத்ரி ரகுராம், நமீதா போன்றவர்களுக்கு இலக்கிய அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் கெளதமி விரக்தியின் உச்சத்திற்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

பாஜகவில் இருந்து விலகும் கவுதமி!? மக்கள் நீதி மய்யம் செல்வாரா?

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாஜக கட்சிக் கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளாமல் கௌதமி ஒதுங்கி இருப்பதாகவும் விரைவில் அவர் பாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவிலிருந்து விலகும் கெளதமி கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.