டெல்லியில் 6 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை! – மத்திய அரசு செய்கிறது

 

டெல்லியில் 6 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை! – மத்திய அரசு செய்கிறது

டெல்லியில் 6 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 6 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை! – மத்திய அரசு செய்கிறதுஇந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த மாநிலங்களில் எல்லாம் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பரிசோதனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

டெல்லியில் 6 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை! – மத்திய அரசு செய்கிறதுடெல்லியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு ஆறு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். 169 புதிய பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டு, ராப்பிட் ஆன்டிஜன் மெத்தடாலஜி முறைப்படி இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் மத்திய அரசு எவ்வளவு பரிசோதனை செய்யப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.