ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 5727 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

 

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 5727 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

2017-18ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தமிழக அரசுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி தொகை ரூ.5727 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
40வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “2017-18ம் ஆண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய மத்திய அரசு ஜிஎஸ்டி தொகை ரூ.4073 கோடி, 2018-19ம் ஆண்டு நிலுவையில் உள்ள ரூ.553.61 கோடி, 2019-20ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.1101.61 கோடியை விரைந்து வழங்க வேண்டும்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 5727 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்உணவு தானியங்களை விற்பனை செய்யும் வணிகர்கள் உறுதிமொழி பத்திரத்தினை காலதாமதமாக தாக்கல் செய்வதை பொறுத்துக்கொள்ள வேண்டும். வணிகர் நலன் கருதி அதன் மீது சாதகமான முடிவினை விரைவாக எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் ஜவுளி, காலணி, செல்போன், உரங்கள் போன்ற பொருட்கள் தலைகீழான வரி கட்டமைப்பு கொண்டுள்ளன. இதனால், இத்தொழில் செய்வோர் இடர்பாடுகளை சந்தித்து வருவதுடன், வரி திருப்பத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதை சீர் செய்யும் விதமாக பிட்மெண்ட் கமிட்டி பரிந்துரைகள் நடைமுறைபடுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் படி ஆயத்த ஆடைகள் மீதான வரியை 5ல் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்துவது ஏற்புடையது இல்லை. அதே போல் உரங்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. வரி விதிப்பால் உரங்கள் விலை உயரும் எனவே இது முற்றிலும் ஏற்புடையது இல்லை” என்றார்.