கடன் தொல்லையால் அரசுப்பள்ளி உதவியாளர் தற்கொலை!

 

கடன் தொல்லையால் அரசுப்பள்ளி உதவியாளர் தற்கொலை!

திருவண்ணாமலை

ஆரணியில் கடன்தொல்லை காரணமாக அரசுப்பள்ளி உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் கமல். இவர் அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தீபா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், குடும்ப செலவுக்காக கமல் நண்பர்களிடம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் அரசுப்பள்ளி உதவியாளர் தற்கொலை!

ஆனால் அதனை திருப்பி தர முடியாததால் பணத்தை கொடுத்தவர்கள் நெருக்கடி அளித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கமல், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார்.

ஆனால் வழியிலேயே கமல் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி நகர போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.