அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க உத்தரவு!

 

அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க உத்தரவு!

தமிழகத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. அதனால் அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் பணியாற்றுமாறு அரசு உத்தரவிட்டது. அதன் படி அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட எல்லா மாவட்டங்களிலும் 100% ஊழியர்களுடன் ஐ.டி நிறுவனங்கள் இயங்கலாம் என்றும் ஆட்டோ, ரிக்சா, கால் டாக்சி என அனைத்தும் இயங்கலாம் என்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க உத்தரவு!

இந்த நிலையில் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் செயல்படலாம் என்றும் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி பணியாளர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு வராத நாட்களை, பணிக்கு வந்த நாட்களாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.