45 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்திற்கு.. அரசின் அறிவுரை!

 

45 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்திற்கு.. அரசின்  அறிவுரை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வரும் சூழலில், வரும் 10ம் தேதி முதல் கடைபிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று பிற்பகல் அறிவித்தது. வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்டவற்றில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தியேட்டர்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே போல ஹோட்டல்கள், திருமண விழாக்கள், துக்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்திற்கு.. அரசின்  அறிவுரை!

அதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வராத வகையில் காவல்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் தினந்தோறும் கண்காணிக்கவும் நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்திற்கு.. அரசின்  அறிவுரை!

மேலும், வெளியே செல்லும் போது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென கேட்டுக்கொண்ட தமிழக அரசு, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.