‘நிவர் புயல் எதிரொலி’ நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

 

‘நிவர் புயல் எதிரொலி’  நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

நிவர் புயலின் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

‘நிவர் புயல் எதிரொலி’  நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, மழை பெய்வதை பொறுத்து தான் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறக்கப்படும் என்றும் புயல் எதிரொலியால் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

‘நிவர் புயல் எதிரொலி’  நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

தொடர்ந்து பேசிய முதல்வர், அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என்றும் விடுமுறை நீக்கப்படுமா என்பது பற்றி நிலைமைக்கு ஏற்றவாறு அரசு முடிவு செய்யும் என்றும் புயல் கரையை கடக்கும் தகவல் வெளியாகும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மக்களுக்காகவே நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், மக்களை காக்க அரசு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.