தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை கட்டண குறைப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐ.சி.எம்.ஆர் பிசிஆர் பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ. 4500 கட்டணம் நிர்ணயிக்கலாம் என தெரிவித்திருந்த நிலையில் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. PCR சோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருந்து PCR சோதனை செய்தால் ரூ.2500 மட்டுமே வசூலிக்க வேண்டும் ( வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக 500 வசூலிக்கலாம் ) என்றும் முதலமைச்சர் காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 மட்டுமே வசூலிக்க வேண்டும், ( வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக 500 ரூ வசூலிக்கலாம் ) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close