ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000.. கொரோனா நிவாரணம் வழங்க அரசு திட்டம்?

 

ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000.. கொரோனா நிவாரணம் வழங்க அரசு திட்டம்?

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி எடுத்து விட்டது. இந்தியா மட்டும் அதில் விதிவிலக்கல்ல. நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனா பாதிப்புகளையும் மரணங்களையும் கட்டுப்படுத்த ‘லாக்டவுன்’ என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தது மத்திய அரசு. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 4 மாதங்களாக மக்களால் வீட்டை விட்டுக் கூட வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தொழில்கள் நசுக்கப்பட்டு வேலைகளை இழந்து உணவுக்கே திண்டாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000.. கொரோனா நிவாரணம் வழங்க அரசு திட்டம்?

பிறகு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டும் மக்களின் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அச்சயமத்தில் தான் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுமென அறிவித்த தமிழக அரசு, குறுகிய காலக்கட்டத்திலேயே பணத்தை விநியோகம் செய்தது. பாதிப்பு அதிகமாக இருந்த இடங்களில் மீண்டும் ரூ.1000 வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ரூ.5000 வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் ரூ.1000 மட்டுமே கொடுக்க அரசு ஒப்புக் கொண்டது. அதை ஈடுகட்டும் விதமாக பொங்கல் பரிசு தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி கொடுத்தது.

ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000.. கொரோனா நிவாரணம் வழங்க அரசு திட்டம்?

இந்த நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.2000 வழங்க தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடிய விரைவில் மற்ற தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தோருக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.