“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

 

“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக் கையாளுகின்றனர். தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுடன் புழங்குகிறார்கள். அவர்கள் சிறு கவனம் சிதறினாலும் கொரோனாவால் எளிதில் தாக்கப்படுவார்கள்.

“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

உயிரைப் பணயம் வைத்து மக்கள் தொண்டாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது சில இடங்களில் பொதுமக்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட ஒருசிலர் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள். இதனைத் தடுப்பதற்காக அப்போதே தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகளுக்கும் யுனியன் பிரதேசங்களும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பெருந்தொற்று நோய்கள் (திருத்த) சட்டம் 2020-ன் கீழும் வழக்கு பதிவு செய்யலாம். இந்தச் சட்டத்தின்படி, குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். மிகவும் மோசமாக தாக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.