”உணவு தானியங்கள் 100 %, சணல் பைகளில் பேக்கிங் – கட்டாயம்” மத்திய அரசு அதிரடி உத்தரவு !

”உணவு தானியங்கள் 100 %, சணல் பைகளில் பேக்கிங் – கட்டாயம்” மத்திய அரசு அதிரடி உத்தரவு !

உணவு தானியங்கள் 100 சதவீதமும், சர்க்கரை 20 சதவீதமும் சணல் பைகளில் மட்டுமே பேக்கிங் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு சணல் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

”உணவு தானியங்கள் 100 %, சணல் பைகளில் பேக்கிங் – கட்டாயம்” மத்திய அரசு அதிரடி உத்தரவு !

நாடெங்கிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக சணல் தொழில்துறை விளங்குகிறது. இந்த துறை பெரும்பாலும், அரசு துறைகளை சார்ந்தே உள்ளது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சணல் பைகள் உணவு தானியங்கள் எடுத்து செல்ல பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சணல் தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாடெங்கிலும் உணவு தானியங்களை 100 சதவீதம் சணல் பைகளில் மட்டும் தான் எடுத்து செல்ல வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. மேலும் 20 சதவீத சர்க்கரை, சணல் பைகளில் எடுத்து செல்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

”உணவு தானியங்கள் 100 %, சணல் பைகளில் பேக்கிங் – கட்டாயம்” மத்திய அரசு அதிரடி உத்தரவு !

இதன் மூலம் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு கருதுகிறது. குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஒடிஷா, அசாம், ஆந்திர பிரதேசம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநில விவசாயிகள் மற்றும் சணல் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவர் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவிற்கு இந்திய சணல் தொழில்துறை சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

”உணவு தானியங்கள் 100 %, சணல் பைகளில் பேக்கிங் – கட்டாயம்” மத்திய அரசு அதிரடி உத்தரவு !

இது குறித்து அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் சஞ்சய் கஜாரியா கூறுகையில், மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்பதாகவும், சணல் தொழில்துறையினருக்கு இது சிறந்த தீபாவளி பரிசு என குறிப்பிட்டார். மேலும் கொரோனா தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், மத்திய அரசின் அறிவிப்பு, சணல் தொழிலை நம்பி உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பேருதவியாக அமையும் என தெரிவித்தார். இதனிடையே, மேற்கு வங்கத்தில் மூடப்பட்டு பின்னர் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள சில சணல் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும் என மற்றொரு ஆலை உரிமையாளர் தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்