• February
    25
    Tuesday

Main Area

Main



புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி; மத்திய அரசு அறிவிப்பு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. இந்திய - திபெத் போலீஸ் விழா தலைநகர் தில்லியில் நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.