7.5% உள் ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை: ஆளுநர்

7.5% உள் ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை: ஆளுநர்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதழ் வழங்கவில்லை.

7.5% உள் ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை: ஆளுநர்

இந்நிலையில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்தக் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

7.5% உள் ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை: ஆளுநர்

இந்நிலையில் 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மசோதா குறித்து எல்லா தரப்பிலும் ஆலோசிக்க வேண்டியுள்ளதாகவும், இதை அமைச்சர்களிடமும் தெரிவித்ததாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.