தமிழிசை ஆளுநரா, பா.ஜ.க தலைவரா? சர்ச்சையை ஏற்படுத்திய டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ ட்வீட்

 

தமிழிசை ஆளுநரா, பா.ஜ.க தலைவரா? சர்ச்சையை ஏற்படுத்திய டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ ட்வீட்


தமிழிசை சௌந்திரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக, தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவரா என்று ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) எம்.எல்.ஏ ஒருவர் கேள்வி எழுப்பியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சௌந்திரராஜன் பொறுப்பேற்றது முதல் அவருக்கும் முதல் அமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. சந்திரசேகர ராவ் மோடி அரசுக்கு பல வகைகளில் ஆதரவாக இருந்தாலும் கூட்டணிக்கு வராமல் போக்கு காட்டி வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் மாநில அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை மாநில அரசு சுமையாக கருதுகிறதா என்று ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார். இது தெலங்கானா ராஷ்டிரி சமிதி தொண்டர்களை ஆத்திரமூட்டியது.

தமிழிசை ஆளுநரா, பா.ஜ.க தலைவரா? சர்ச்சையை ஏற்படுத்திய டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ ட்வீட்


இதனால் கோபம் கொண்ட டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ சைதி ரெட்டி தமிழிசைக்கு சூடான பதில் அளித்தார். அதில், “நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தெலங்கானாவில் கிராம அளவில் கூட அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர் சந்திரசேகர ராவ் கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்ற ஆரம்பிக்கின்றன. ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனின் கருத்தைப் பார்க்கும்போது அவர் தெலங்கானா ஆளுநரா அல்லது பா.ஜ.க தலைவரா என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்.

தமிழிசை ஆளுநரா, பா.ஜ.க தலைவரா? சர்ச்சையை ஏற்படுத்திய டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ ட்வீட்


இந்த ட்வீட் பதிவு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வருக்குத் தெரியாமல் இவ்வளவு கடுமையாக பதிவிட்டிருக்க முடியாது. எனவே, இது டி.ஆர்.எஸ்-ன் கருத்து என பா.ஜ.க தொண்டர்கள் கொந்தளித்தனர். பிரச்னை பெரிதாகவே, பதிவை நீக்கும்படி அவருக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் இரு கட்சிகள் இடையே சர்ச்சை நீங்கிபாடில்லை.