அடுத்தடுத்து கொரோனா தொற்று!-குவாரண்டைனில் பன்வாரிலால் புரோகித், நாகை எம்பி

 

அடுத்தடுத்து கொரோனா தொற்று!-குவாரண்டைனில் பன்வாரிலால் புரோகித், நாகை எம்பி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நாகை எம்பி செல்வராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோளா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பணியாளர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் கவர்னர் 7 நாள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஆளுருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாததால், ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளது அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், இந்திய கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு தொடர் சேவையில் ஈடுபடும் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளும் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.