3 முறை நிராகரித்த கவர்னர்..விடாமல் முயற்சி செய்த அசோக் கெலாட்..சட்டப்பேரவை கூட்ட ஒப்புதல் அளித்த கல்ராஜ்

3 முறை நிராகரித்த கவர்னர்..விடாமல் முயற்சி செய்த அசோக் கெலாட்..சட்டப்பேரவை கூட்ட ஒப்புதல் அளித்த கல்ராஜ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மிகவும் தீவிரமாக உள்ளது. அதற்காக அம்மாநில சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்குமாறு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வர் அசோக் கெலாட் அரசு 2 முறை கோரிக்கை விடுத்தது. ஆனால் 2 முறையும் காரணத்தை கூறி காங்கிரஸ் அரசின் கோரிக்கை கவர்னர் நிராகரித்து விட்டார்.

3 முறை நிராகரித்த கவர்னர்..விடாமல் முயற்சி செய்த அசோக் கெலாட்..சட்டப்பேரவை கூட்ட ஒப்புதல் அளித்த கல்ராஜ்

ஆனால் பின்னர் 21 நோட்டீஸ் உள்பட சில நிபந்தனைகளுடன் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்க தயார் என நேற்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார். இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதிய கடிதத்தில், சட்டப்பேரவை அமர்வை கூட்ட கூடாது என்ற எந்த நோக்கமும் கவர்னர் மாளிக்கை கிடையாது, மூன்று பரிந்துரைகளை இணைத்து மற்றொரு கோரிக்கையை சமர்ப்பியுங்கள் என அதில் தெரிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவையை கூட்ட அழைப்பு விடுக்குமாறு கவர்னருக்கு கெலாட் அரசு 3வது முறையாக கோரிக்கை கடிதத்தை அனுப்பியது.

3 முறை நிராகரித்த கவர்னர்..விடாமல் முயற்சி செய்த அசோக் கெலாட்..சட்டப்பேரவை கூட்ட ஒப்புதல் அளித்த கல்ராஜ்

ஆனால் நேற்றும் அதனை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். அதன் பிறகு கெலாட் அரசு, சட்டப்பேரவையை கூட்ட அழைப்பு விடுக்குமாறு நான்காவது முறையாக முன்மொழிவை கவர்னருக்கு அனுப்பியது. இது குறித்து அம்மாநில அமைச்சர் கச்சரியாவாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டக்கோரி கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு மீண்டும் ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளோம். இந்த முறை கவர்னர் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு விரைவில் அமர்வை தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.காங்கிரஸ் எதிர்பார்த்தப்படி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட அழைப்பு விடுக்க ஒப்புதல் அளித்தார். ஆனால் உடனடியாக அல்லாமல் ஆகஸ்ட் 14ம் தேதி சட்டப்பேரவையை கூட்டக் கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.