நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்க தயார்.. கெலாட் அரசுக்கு செக் வைச்ச கவர்னர்

நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்க தயார்.. கெலாட் அரசுக்கு செக் வைச்ச கவர்னர்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மிகவும் தீவிரமாக உள்ளது. அதற்காக அம்மாநில சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்குமாறு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வர் அசோக் கெலாட் அரசு 2 முறை கோரிக்கை விடுத்தது. ஆனால் 2 முறையும் காரணத்தை கூறி காங்கிரஸ் அரசின் கோரிக்கை கவர்னர் நிராகரித்து விட்டார்.

நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்க தயார்.. கெலாட் அரசுக்கு செக் வைச்ச கவர்னர்

இந்த சூழ்நிலையில், சில நிபந்தனைகளுடன் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்க தயார் என நேற்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சட்டப்பேரவை அமர்வை கூட்ட கூடாது என்ற எந்த நோக்கமும் கவர்னர் மாளிக்கை கிடையாது, மூன்று பரிந்துரைகளை இணைத்து மற்றொரு கோரிக்கையை சமர்ப்பியுங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்க தயார்.. கெலாட் அரசுக்கு செக் வைச்ச கவர்னர்

கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கீழ்கண்ட விஷயங்களுக்கு தீர்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவை, 1. 21 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க அரசு ஒப்புக்கொண்டால் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்கப்படும். 2. 200 எம்.எல்.ஏ.க்கள் தவிர, 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? யாருக்கும் தொற்று ஏற்பட்டால், அது எவ்வாறு தடுக்கப்படும்? 3. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், அவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். 4. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆம் அல்லது இல்லை பட்டனை அழுத்துவதன் மூலம் செயல்முறை முடிக்க வேண்டும். 5. கோவிட்-19 பரவலை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவையில் சமூக விலகல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.