வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி!

 

வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி!

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இரவு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் லடாக்கில் தற்போது நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி!

இந்நிலையில் லடாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் சிறப்பு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கடுக்கலூருக்கு தமிழக ஆளுநர் சார்பில் அவரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி மேஜர் அஜய் பிஎஸ் ரத்தோர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வந்தார். பின்னர் பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திய ரத்தோர், அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் சிறப்பு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பழனியின் குடும்பத்தாரிடம் ரத்தோர் வழங்கினார்.