அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் இவர் தான்? – அறிவித்தார் ஆளுநர்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் இவர் தான்? – அறிவித்தார் ஆளுநர்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சூரப்பா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்மொழியப்பட்டன. இதற்குப் பிறகு இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் முழுவதுமாக விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளது. இதனிடையே விசாரணையின்போதே ஏப்ரல் 11ஆம் தேதி சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் இவர் தான்? – அறிவித்தார் ஆளுநர்!

இதற்குப் பிறகு புதிய துணை வேந்தரை நியமிக்கும் வேலையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் முடுக்கிவிட்டார். அதன்படி துணைவேந்தரை தேடும் பொருட்டு டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட தேடல் குழுவை அமைத்தார். புதிய துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 160 பேரில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் உள்பட தகுதிவாய்ந்த 10 பேரை தேடல் குழு இறுதி செய்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் இவர் தான்? – அறிவித்தார் ஆளுநர்!
சூரப்பா

இந்த 10 பேருக்கும் கடந்த 9ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது. இதில் தகுதியான மூன்று பேரை தேர்வு செய்து தேடல் குழு ஆளுநரிடம் சமர்பித்தது. தற்போது ஆளுநர் அந்த மூவரில் ஒருவரை தேர்வு செய்திருக்கிறார். அதன்படி புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வேல்ராஜ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். முனைவர் பட்டம் பெற்ற வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி துறை இயக்குநராகவும் உள்ளார். இவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் இவர் தான்? – அறிவித்தார் ஆளுநர்!

பேராசிரியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வேல்ராஜ் மெக்கானிக்கல் முனைவர் துறையில் மூன்று படிப்புகளை அறிமுகம் செய்தவராவர். அதேபோல முதுகலை பொறியியல் துறையில் 9 புதிய படிப்புகளை அறிமுகம் செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இயக்குநர், துணை இயக்குநர், துறைத் தலைவர் என 14 ஆண்டுகள் நிர்வாகப் பணிகளிலும் இருந்துள்ளார். மிக முக்கியமாக இவர் தமிழர். தமிழர் ஒருவரே நியமனம் செய்யவேண்டும் என்றதால் வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.