வந்தது ரூ.17.5 லட்சம் கோடிதான்… ஆனால் செலவு ரூ.26.98 லட்சம் கோடி…. கையை பிசையும் மத்திய அரசு….

வந்தது ரூ.17.5 லட்சம் கோடிதான்… ஆனால் செலவு ரூ.26.98 லட்சம் கோடி…. கையை பிசையும் மத்திய அரசு….

அரசின் செலவுக்கும், கடன் அல்லாத வருவாய்க்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறை. 2019-20ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக (மறுமதிப்பீடு) வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் வருவாய் நிலவரம் மிகவும் மோசமாக இருந்ததால் சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை இலக்கை காட்டிலும் தாண்டி விட்டது.

வந்தது ரூ.17.5 லட்சம் கோடிதான்… ஆனால் செலவு ரூ.26.98 லட்சம் கோடி…. கையை பிசையும் மத்திய அரசு….

தலைமை கணக்கு தணிக்கையாளர் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.59 சதவீதமாக இருந்தது. அரசு நிர்ணயத்த கட்டுப்பாட்டு இலக்கான 3.8 சதவீதத்தை காட்டிலும் மிகவும் அதிகமாகும். மேலும் சென்ற நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.27 சதவீதமாக இருந்தது.

வந்தது ரூ.17.5 லட்சம் கோடிதான்… ஆனால் செலவு ரூ.26.98 லட்சம் கோடி…. கையை பிசையும் மத்திய அரசு….

சென்ற நிதியாண்டில் ரூ.19.31 லட்சம் கோடி வருவாய் வரும் என அரசு மதிப்பிட்டு இருந்தது. ஆனால் வந்தது ரூ.17.5 லட்சம் கோடிதான். அதேவேளையில் மத்திய அரசு செலவினங்களை சுருக்கியும் மொத்தம் ரூ26.86 லட்சம் கோடிக்கு செலவுகள் செய்யப்பட்டு இருந்தது. நிதிப்பற்றாக்குறை இலக்கை காட்டிலும் அதிகரித்து இருப்பது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாகும்.