6 மாதத்துக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு…. சானிடைசர், மாஸ்க் மற்றும் கிளவுசுடன் வந்த மாணவர்கள்….

6 மாதத்துக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு…. சானிடைசர், மாஸ்க் மற்றும் கிளவுசுடன் வந்த மாணவர்கள்….

தெலங்கானாவில் 6 மாதத்துக்கு பிறகு நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் புத்தகங்களுடன் சானிடைசர், மாஸ்க் மற்றும் கிளவுஸ் ஆகியவற்றுடன் பள்ளிக்கு வந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மத்தியில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. அதுமுதல் கடந்த 6 மாதங்களாக காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் உயர் நிலை பள்ளிகளை மட்டும் திறந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து தெலங்கானா, அசாம் உள்பட சில மாநிலங்களில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று பள்ளிகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

6 மாதத்துக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு…. சானிடைசர், மாஸ்க் மற்றும் கிளவுசுடன் வந்த மாணவர்கள்….
பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஹைதராபாத்தில் உள்ள ராஜ் பவன் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கருணா ஸ்ரீ கூறுகையில், இன்று முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டன, தெலங்கானா மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்படி, உயர் நிலை பள்ளி மாணவர்கள் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது ஆப்லைன் வகுப்பை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, பெற்றொர்களிடமும் இது குறித்து தெரிவிக்கப்பட்டது.

6 மாதத்துக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு…. சானிடைசர், மாஸ்க் மற்றும் கிளவுசுடன் வந்த மாணவர்கள்….
மாணவிகள்

ஆன்லைனில் வகுப்பில் கலந்து கொண்ட பிறகு எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். மாணவர்கள் தங்களது சொந்த சானிடைசர், மாஸ்க் மற்றும் கிளவுஸ் கொண்டு வர வேண்டும். பள்ளியிலும் சானிடைசர் வசதி அமைத்துள்ளோம். மேலும் தங்களது வார்டில் கோவிட்-19இன் எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் தங்களை சரியான முறையில் கவனித்து கொள்ளுவதாகவும் மாணவர்களும், பெற்றோர்களும் அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும். முதல் நாளில் மாணவர்கள் குறைவாகவே வந்தனர். வரும் நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.