கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா அரசாணை வெளியீடு!

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா அரசாணை வெளியீடு!

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா அரசாணை வெளியீடு!

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர். இதன் காரணமாக கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க ஏதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் 2021 வரை 4 மாதங்களுக்கு எல்காட் நிறுவனம் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டு) வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா அளிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா அரசாணை வெளியீடு!

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் ,கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 9,69, 047 மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா எல்காட் நிறுவனத்தின் மூலம் தினமும் வழங்கப்படும். இதற்காக எல்காட் நிறுவனத்தின் மூலம் ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதற்கான சிம்கார்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.