விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க அரசு தயார் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க அரசு தயார் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 8-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க அரசு தயார் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அதே சமயம் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சிங்கு எல்லை, காஜிப்பூர் எல்லை, நொய்டா எல்லை என பல பகுதிகளில் விவசாயிகள் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க அரசு தயார் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக அரசு விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவர்களின் பரிந்துரைகளை ஏற்க தயாராக உள்ளது . பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது” என்றார்.