‘ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி’ : மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்!

‘ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி’ : மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

‘ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி’ : மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்!

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜல்லிக்காட்டும், பிற இடங்களில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக மாடுகளை தயார் செய்யும் பணி தொடங்கிவிட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

‘ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி’ : மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்!

ஜல்லிக்கட்டில் 50% பார்வையாளர்களுடன் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதாகவும், மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும் பார்வையாளர்களாக பங்கேற்பவர்கள் முகக் கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு காளை வளர்ப்போரையும், மாடுபிடி வீரர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.