விநாயகர் விவகாரத்தில் தமிழக அரசு தவறான நடைமுறையை கடைபிடிக்கிறது! – இந்து முன்னணி சொல்கிறது

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தமிழக அரசு தவறான நடைமுறையைக் கடைபிடித்து உள்ளது என்று இந்து முன்னணி மாநில தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வீடுகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களுக்கு கொரோனா பரவல் தடுக்க கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை செய்ய, ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. தமிழக அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறிவிட்டு, கடைசி நேரத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் பிரச்னையை ஏற்படுத்தின. இருப்பினும் மக்கள் நலனே முக்கியம் என்று தமிழக அரசு உறுதியாக இருந்தது.

விநாயகர் விவகாரத்தில் தமிழக அரசு தவறான நடைமுறையை கடைபிடிக்கிறது! – இந்து முன்னணி சொல்கிறது

தமிழக அரசின் மக்கள் நல செயல்பாட்டுக்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று இது குறித்துக் கூறுகையில், “இந்துக்களை ஒற்றுமைப்படுத்தி நல்வழிப்படுத்தவே விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. நீதிமன்ற அறிவுரைகளைப் பின்பற்றி நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். இருப்பினும், விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தமிழக அரசு தவறான நடைமுறையைக் கடைப்பிடித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வழக்கமாக நடைபெறும் பொதுக் கூட்டம், ஊர்வலம், கூட்டமாக சென்று சிலைகளைக் கரைக்கும் நிகழ்வு இந்த ஆண்டு இருக்காது” என்று கூறியுள்ளார்.