பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

 

பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதுமே பேரச்சத்தை விளைவித்து வருகிறது.

உலகளவில் 7 கோடியோ 98 லட்சத்துக்கு அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆயினும் 5.6 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சையால் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

கொரோனாவின் தாக்குதலே இன்னும் முடியாத நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் தாக்கத் தொடங்கி விட்டது. பிரிட்டனில் இதன் தொடக்கம் அமைந்தது. அந்த நாட்டில் அதிவேகமாக புதிய வகை கொரோனா பரவியது.

பிரிட்டனில் இந்த புதிய வகை கொரோனா தாக்குதல் தொடங்கியது. அங்கிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

அதனால், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்துள்ளவர்கள் தாமாகவே முன் வந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு உதவி எண் 104 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்குள் வந்திருக்கும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், பிரிட்டன் சென்று தமிழ்நாடு திரும்பியவர்கள் அனைவருமே இந்தப் பரிசோதனையில் ஈடுபட வேண்டும் தமிழ்நாடு அரசின் சுகாதார துறை கேட்டுக்கொண்டது.