தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு

 

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500, பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25, ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50, வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் , பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 கட்டணம்” என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.