‘தாம்பரம்’ மாநகராட்சியாக அறிவிப்பு!

 

‘தாம்பரம்’ மாநகராட்சியாக அறிவிப்பு!

மாநகராட்சி ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் ,மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.

‘தாம்பரம்’ மாநகராட்சியாக அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது.

‘தாம்பரம்’ மாநகராட்சியாக அறிவிப்பு!

இந்நிலையில் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் சுற்றி உள்ள பேரூராட்சிகள். ஊராட்சிகள் ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.