மின் கட்டண பணத்தில் போயஸ் பங்களாவை வாங்கிய தமிழக அரசு! – உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பதிவு

மின் கட்டண பணத்தில் போயஸ் பங்களாவை வாங்கிய தமிழக அரசு! – உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பதிவு

டாஸ்மாக் மற்றும் ஏழைகளிடம் மின்சார கட்டணம் மூலம் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை தமிழக அரசு வாங்கியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு

மின் கட்டண பணத்தில் போயஸ் பங்களாவை வாங்கிய தமிழக அரசு! – உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பதிவு

கையகப்படுத்தியுள்ளது. இதற்கான இழப்பீட்டுத் தொகையை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது பூர்வீக சொத்து என்பதால் அரசால் கையகப்படுத்த முடியாது என்று ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா, தீபக் தெரிவித்துள்ளனர்.

http://

இந்த நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஏழைகளிடம் மின்கட்டண கொள்ளை நடத்தியும் டாஸ்மாக் மூலம் கஜானாவை நிரப்பியும்

மின் கட்டண பணத்தில் போயஸ் பங்களாவை வாங்கிய தமிழக அரசு! – உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பதிவு

முன்னாள் முதலாளியம்மாவின் பங்களாவை கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது அடிமைக்கூட்டம். 4 மாத கொரோனா ஊரடங்கால் தவிக்கும் சாமானியர்களுக்கு உதவாத அரசுப் பணம், எடுபிடிகளின் அரசியல் லாபத்துக்கு பயன்படுவது வெட்கக்கேடு” என்று கூறியுள்ளார்.