30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது.

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பாசன கால்வாய்கள் தூர்வாருதல், உரம், விதைகள் சரியான நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட காரணங்களால், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!
தமிழக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வயல்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவும், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு 25 தினங்களுக்கு முன்பாகவும் பாசன நீர் சென்றடைந்தது. இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட்3-ம் தேதி நிலவரப்படி 3 லட்சத்து87 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகடந்த ஆண்டைவிட 1.067 லட்சம் ஏக்கர் அதிகமாகும். மேலும், கடந்த30 ஆண்டு வரலாற்றில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பு இதுவே ஆகும்.

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!
அதுபோல பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கரில் பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டதைவிட, 1.03 லட்சம் ஏக்கர் அதிகமாகும்.
அரசு நடவடிக்கைகள் காரணமாக குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கரிலிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.