கொரோனாவால் வந்த வினை.. நவ.10 முதல் 30ம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை.. ஒடிசா அரசு

 

கொரோனாவால் வந்த வினை.. நவ.10 முதல் 30ம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை.. ஒடிசா அரசு

ஒடிசாவில் நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு அம்மாநில அரசு இம்மாதம் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட்-19 எதிராக பொருத்தமான நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படாத நம் நாட்டின் சில பகுதிகளிலும், உலகிலும் கோவிட்-10 தொற்றுநோயின் மீள் எழுச்சி காணப்படுகிறது. பல நாடுகள் லாக்டவுன் மற்றும் பிற தீவிரமான நடவடிக்கைகளை மீண்டும் கட்டாயப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் வந்த வினை.. நவ.10 முதல் 30ம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை.. ஒடிசா அரசு
முதல்வர் நவீன் பட்நாயக்

எதிர்வரும் குளிர்காலத்தில் தொற்றுநோய் மேலும் பரவுவதை காணலாம் என்பதை சர்வதேச அனுபவம் உணர்த்துகிறது. பட்டாசுகளை எரிப்பதால் நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை ஏராளமாக வெளியாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சுவாச ஆரோக்கிய பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு (மக்களுக்கு) இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய மாசுக்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை தவிர கோவிட்-19 பாசிட்டிவ் நபர்களுக்கும் ஆரோக்கிய நிலைமைகளை மேலும் மோசமாக்கும்.

கொரோனாவால் வந்த வினை.. நவ.10 முதல் 30ம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை.. ஒடிசா அரசு
பட்டாசு விற்பனை கடை

எனவே மேற்கூறிய காலத்தில், பொதுநலனுக்காக பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒளியின் திருவிழாவான தீபாவளி பாரம்பரிய முறையில் மண்விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் பிற பாரம்பரிய ஒளி பொருட்களை ஏற்றி கொண்டாடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.