‘வெடிகுண்டு வீச்சில்’ உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மனைவிக்கு அரசு பணி!

‘வெடிகுண்டு வீச்சில்’ உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மனைவிக்கு அரசு பணி!

தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியின் மனைவிக்கு அரசு பணி வழங்கப்பட்டது.

‘வெடிகுண்டு வீச்சில்’ உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மனைவிக்கு அரசு பணி!

தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை அருகே கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி குற்றவாளி துரைமுத்துவை பிடிக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான குழு சென்றது. துரைமுத்து மீது 2 கொலை வழக்குகள் இருப்பதால் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது துரைமுத்து காவலர்களிடம் இருந்து தப்பிக்க தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வீசியதில், காவலர் சுப்பிரமணியன்(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குண்டு வீசிய துரைமுத்துவும் அந்த விபத்தில் சிக்கி சம்பவ உயிரிழந்தார்.

‘வெடிகுண்டு வீச்சில்’ உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மனைவிக்கு அரசு பணி!

காவலர் சுப்பிரமணியன் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், காவலர் சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரிக்கு அரசு பள்ளி உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணையை இன்று முதல்வர் வழங்கினார். மேலும், ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். புவனேஸ்வரிக்கு 8 மாத கைக்குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.