“சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு பணி” : அமைச்சர் உதயகுமார் விளக்கம்!

 

“சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு பணி” : அமைச்சர் உதயகுமார் விளக்கம்!

மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

“சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு பணி” : அமைச்சர் உதயகுமார் விளக்கம்!

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் தினத்தையொட்டி பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிகட்டுப் போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் தென்மண்டல ஐஜி முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 651 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ள நிலையில் 756 காளைகள் வாடி வாசலில் வீரர்களை சந்தித்து வருகின்றன. முதல் சுற்று முடிவடைந்து தற்போது இரண்டாவது சுற்று நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

“சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு பணி” : அமைச்சர் உதயகுமார் விளக்கம்!

இந்நிலையில் மதுரை பாலமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அரசியலை முன்னிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ராகுல்காந்தி, உதயநிதி வந்தனர். திருமங்கலம் அருகே ஜெயலலிதாவுக்காக கட்டிய கோயிலை ஜனவரி 30-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார் ” என்றார்.